முகப்பு > மற்றவை > நவம்பர் 29இல் யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள்
மற்றவைமுதன்மைச் செய்திகள்

நவம்பர் 29இல் யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள்

கோலாலம்பூர், நவ.20

ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான மதிப்பீட்டு அறிக்கை (பிபிஎஸ்ஆர்) உட்பட யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள் எதிர்வரும் 29ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர், டத்தோ டாக்டர் அமின் செனின் தெரிவித்தார்.

இதில் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் முடிவை அன்றைய தினத்தில் காலை 10.00 மணி தொடங்கி தத்தம் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது கைப்பேசியில் 15888 என்ற எண் வாயிலாகக் குறுந்தகவல் அனுப்பியும் தெரிந்துக் கொள்ளலாம்.

இந்த ஆன்லைன் சேவை அன்றைய தினத்தில் காலை 10.00 தொடங்கி வரும் டிசம்பர் 8ஆம் தேதி மாலை 6.00 மணி வரை செயலில் இருக்கும். அப்படி தேர்வு முடிவை மாணவர்கள் எடுக்க முடியா விட்டால் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எடுக்க அனுமதிக்கப்படுகிறது என ஓர் அறிக்கையில் அவர்குறிப்பிட்டார்.

இதில் யூபிஎஸ்ஆர், ஆரம்பப் பள்ளிகளுக்கான மாற்று மதிப்பீட்டுத் தேர்வு (பிஏஎஸ்ஆர்) முடிவுகளை மலேசிய தேர்வு வாரியத்தின் இணையத் தளமான ‘lp.moe.gov.my‘ அகப்பக்கத்திலும் மாணவர்கள் தெரிந்துக் கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன