வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > நெய்மார், எம்பாப்பே இல்லாமல் லிவர்பூலை எதிர்கொள்ளுமா பி.எஸ்.ஜி ???
விளையாட்டு

நெய்மார், எம்பாப்பே இல்லாமல் லிவர்பூலை எதிர்கொள்ளுமா பி.எஸ்.ஜி ???

பாரிஸ், நவ.22 –

அனைத்துலக நட்புமுறை ஆட்டங்களில் பாரிஸ் செயின் ஜெர்மைன் ( பி.எஸ்.ஜி ) அணியின்  முன்னணி நட்சத்திர ஆட்டக்காரர்கள் நெய்மாரும், கிலியன் எம்பாப்பேவும் காயம் அடைந்திருக்கின்றனர். இதனால் இவ்விரண்டு ஆட்டக்காரர்களும் வரும் புதன்கிழமை ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் லிவர்பூல் அணிக்கு எதிராக களமிறங்குவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கெமரூனுக்கு எதிரான நட்புமுறை ஆட்டத்தில் பிரேசிலின் நெய்மார் காயம் அடைந்தார். அந்த ஆட்டத்தில் பிரேசில் 1-0 என்ற கோலில் கெமரூனை வீழ்த்தியது. அதேவேளையில் உருகுவேயை 0 – 1 என்ற கோலில் பிரான்ஸ் வீழ்த்தியபோது, கிலியன் எம்பாபே காயம் அடைந்துள்ளார்.

முதல் கட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனையில் நெய்மாரின் தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் எம்பாப்பேவின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.  அடுத்து வரும் 48 மணி நேரத்தில் இவ்விரன்டு ஆட்டக்காரர்களின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என பி.எஸ்.ஜி அணி அறிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன