வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > அயர்லாந்து நிர்வாகி பொறுப்பில் இருந்து விலகினார் மார்டின் ஓ நேல் !
விளையாட்டு

அயர்லாந்து நிர்வாகி பொறுப்பில் இருந்து விலகினார் மார்டின் ஓ நேல் !

டப்ளின், நவ.22 –

அயர்லாந்து கால்பந்து அணியின் நிர்வாகி பொறுப்பில் இருந்து மார்டின் ஓ நேல் விலகியுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான லீக் போட்டியில் அயர்லாந்து அணி மோசமான அடைவுநிலையை வெளிப்படுத்தி இருப்பதை அடுத்து மார்டின் ஓ நேல் தமது நிர்வாகி பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

ஸ்காட்லாந்தின் செல்டி, இங்கிலாந்தின் லெய்செஸ்டர் சிட்டி அணிகளின் முன்னாள் நிர்வாகியான மார்டின் ஓ நேல், கடந்த 2013 ஆம் ஆண்டில் கியோவோனி திரப்போத்தோனிக்குப் பதில் அயர்லாந்து கால்பந்து அணியின் நிர்வாகி பொறுப்பை ஏற்றார். மென்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் ஆட்டக்காரர் ரோய் கீன், துணை நிர்வாகியாக பொறுப்பேற்றார்.

2016 ஆம் ஆண்டில் நடந்த ஐரோப்பிய கிண்ண கால்பந்துப் போட்டியில் அயர்லாந்து அணியை இரண்டாவது சுற்றுக்கு அழைத்து சென்ற மார்டின் ஓ நேல், தமது நிர்வாகத்தின் கீழ் நடந்த 55 ஆட்டங்களில் ஜெர்மனி, இத்தாலிக்கு எதிராக வெற்றியைப் பதிவுச் செய்து அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளார்.

எனினும் இந்த ஆண்டில் நடந்த 9 ஆட்டங்களில் அயர்லாந்து ஓர் ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவைத் தோற்கடித்த அயர்லாந்து ஆக கடைசியாக நடைபெற்ற ஆட்டத்தில் டென்மார்க்குடன் சமநிலைக் கண்டது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன