வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வுப் பெற்றார் டுரோக்பா !
விளையாட்டு

கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வுப் பெற்றார் டுரோக்பா !

லண்டன், நவ.22 –

செல்சியின் முன்னாள் தாக்குதல் ஆட்டக்காரர், டீடியர் டுரோக்பா, கால்பந்து விளையாட்டில் இருந்து முழுமையாக ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார். 20 ஆண்டுகளாக கால்பந்து விளையாட்டில் ஒரு முக்கியமான ஆட்டக்காரராக வலம் வந்துள்ள டுரோக்பா, நான்கு இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டங்களும் ஓர் ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணத்தையும் வென்றுள்ளார்.

ஆக கடைசியாக, அமெரிக்காவின் பீனிக்ஸ் ரைசிங் கிளப்பில் விளையாடிய டீடியர் டுரோக்பா, செல்சி கிளப்புடனான 381 ஆட்டங்களில் 164 கோல்களையும் போட்டுள்ளார். செல்சி கால்பந்து கிளப்பை ,  ரோமான் அப்ரோமோவிச் விலைக்கு வாங்கியப் பின்னர் அந்த கிளப்பின் மறுமலர்ச்சியில் டுரோக்பா முக்கிய பங்கை ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

40 வயதுடைய டுரோக்பா, 1998 ஆம் ஆண்டில் பிரான்சின் லெ மான்ஸ் கிளப்பில் தமது கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கினார். 23 வயது வரை டுரோக்பா, சாதரண ஓர் ஆட்டக்காரராகவே வலம் வந்தார். 2003 ஆம் ஆண்டில் பிரான்சின் மார்சேல் அணியில் இணைந்தப் பின்னர் செல்சியின் கவனத்தை ஈர்த்தார்.

ஜோசே மொரின்ஹோ உருவாக்கிய பலம் வாய்ந்த செல்சி அணியில் டீடியர் டுரோக்பா தாக்குதல் பகுதியின் தளபதியாக செயல்பட்டார்.  1955 ஆம் ஆண்டுக்குப் பிறகு, 2005 ஆம் ஆண்டில் முதல் முறையாக செல்சி பிரீமியர் லீக் கிண்ணத்தை வெல்வதற்கும் டுரோக்பா துணைப் புரிந்தார் என்பது குறிப்பிடதக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன