பட்டர்வொர்த், நவ. 25
பி40 பிரிவினருக்கான மருத்துவ நிதி 36 நோய்களுக்கு விரிவு படுத்தப்படும் என நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் அது 4 நோய்களுக்கு மட்டுமே இருந்தது. அந்த விதிமுறை தற்போது மாற்றம் கண்டுள்ளது. அந்த நிதி அடுத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு வரும் என்றும் பி40 பிரிவினர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டால் 14 நாள்களுக்கு அதன் பயனை அனுபவிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

36 விதமான நோய்களுக்காக மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவோருக்கு ஒரு நாளைக்கு 50 வெள்ளி விகிதத்திலும் ஆண்டொன்றுக்கு 700 வெள்ளியாகவும் வழங்கப்படும்.

காப்புறுதி நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த நிதியானது மத்திய வங்கியின் மூலம் நிர்வகிக்கப்படும் என்றும் அதற்கான அகப்பக்கம் விரைவில் திறக்கப்படும் என்று அவர் செய்டியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அந்த நிதி வெறும் 4 நோய்களுக்கு மட்டுமே நிதியுதவி வழங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.