அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > சீபீல்ட் ஆலயத்தில் அராஜகம்; அமைச்சர் வேதமூர்த்தி வேதனை
அரசியல்முதன்மைச் செய்திகள்

சீபீல்ட் ஆலயத்தில் அராஜகம்; அமைச்சர் வேதமூர்த்தி வேதனை

புத்ராஜெயா, நவ.26-

சீபீல்ட் ஆலயத்தில் இன்று திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான காணொளிக் காட்சிகளையும் முகநூல் பதிவேற்றங்களையும் சமூக ஊடகங்களின்வழி தொடர்ந்து பெற்றதன் தொடர்பில் தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர்(துணை ஐஜிபி) டான்ஸ்ரீ நோர் ரஷிட் இப்ராகிமுடன் தொடர்பு கொண்டதாக பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமய சுதந்திரத்துடன் பல இன மக்களாகவும் பல சமயங்களைப் பின்பற்றுபவர்-களாகவும் வாழும் மலேசியக் கூட்டு சமுதாயத்தில் நிலவும் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கு மருட்டல் ஏற்படும் அளவிற்கு இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு காயம் ஏற்படுத்தியதுடன் ஆலய வளாகத்தில் உள்ள சொத்துக்களுக்கு தீ வைக்கப்பட்ட இந்தத் தாக்குதலால் சமூகத்தில் பதற்றமும் முறுகல் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்பில் சில குற்றச்சாட்டுகளும் வரம்பில்லாமல் இணைய ஊடகங்களின் மூலம் பகிரப்படுகின்றன.

திடீரென்று நடந்துவிட்ட இந்தச் சம்பவம் குறித்து முழு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று துணை ஐஜிபி அறிவித்துள்ள நிலையில், இடைப்பட்ட காலத்தில் இதன் தொடர்பில் உண்மை நிலைத் தெரியும் வரையில் அனைத்துத் தரப்பினரும் அமைதி காத்து சட்டத்தின் ஆட்சி நிலைபெற துணை புரிய வேண்டும் என்று வேதமூர்த்தி அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன