வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணம் : பிஎஸ்ஜியிடம் மண்டியிட்டது லிவர்பூல்! அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது பார்சிலோனா
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணம் : பிஎஸ்ஜியிடம் மண்டியிட்டது லிவர்பூல்! அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது பார்சிலோனா

பாரீஸ், நவ. 29-

ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ண கால்பந்து போட்டியின் இரண்டாம் சுற்றுக்குள் நுழைவதில் முன்னணி கால்பந்து அணிகளுக்குள் கடும் போட்டி நிலவுகின்றது. அந்த வகையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஆட்டத்தில் பிரான்ஸின் முன்னணி கால்பந்து அணியான பிஎஸ்ஜி, இங்கிலாந்தின் முன்னணி கால்பந்து அணியான லிவர்பூலை சந்தித்து விளையாடியது.

பிஎஸ்ஜி அரங்கில் நடந்த இவ்வாட்டத்தில் அவ்வணியின் முன்னணி தாக்குதல் ஆட்டக்காரர்களான நெய்மார், கெலியன் இம்பாப்பே உலகளவிய நட்புமுறை ஆட்டத்தில் காயம் அடைந்ததால், இவ்வாட்டத்தில் விளையாட மாட்டார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால் இந்த இரண்டு ஆட்டக்காரர்களும் முன்னணி வரிசையில் இடபெற்றார்கள்.

அதோடு லிவர்பூல் அணியின் தற்காப்பு ஆட்டக்காரர்களுக்கு தொடர்ந்து நெருக்குதலை வழங்கினார்கள். பிஎஸ்ஜியின் அதிரடி ஆட்டத்தை சமாளிப்பதில் லிவர்பூல் தடுமாறியது. இதனிடையே ஆட்டத்தில் 13ஆவது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணியின் தற்காப்பு ஆட்டக்காரரான ஜுவென் பெர்னேட் தமது அணிக்கான முதல் கோலை அடித்து அதிரடி படைத்தார்.

பின்னர் 37ஆவது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணி அதிரடி தாக்குதலை தொடுத்தது. அப்போது அவ்வணிக்கான 2ஆவது கோலை நெய்மார் அடித்தார். இதனால் பிஎஸ்ஜி அணி 2 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னிலை பெற்றது. முதல்பாதியின் முடிவில் பிஎஸ்ஜி ஆட்டக்காரரான ஹெங்கல் டி மாரியா, லிவர்பூல் ஆட்டக்காரரான சாடியோ மானேவை கீழே தள்ளியதால் பெனால்டி வழங்கப்பட்டது. அதனை ஜேம்ஸ் மில்னெல் கோலாகினார்.

பிற்பாதியில் இரண்டு அணி ஆட்டக்காரர்களும் முரட்டுத் தனமாக விளையாடினார்கள். இதனால் பல ஆட்டக்காரர்களுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. லிவர்பூல் இறுதி நிமிடம் வரை போராடியும் அவ்வணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிஎஸ்ஜி வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் இத்தாலியின் நப்போலி அணி 3 என்ற கோல் எண்ணிக்கையில் கவேனா அணியை வென்றது.

குழு பிரிவில் இன்னும் 1 ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் 9 புள்ளிகளுடன் நப்போலி முதலிடத்திலும் 8 புள்ளிகளுடன் பிஎஸ்ஜி 2ஆம் நிலையிலும் 6 புள்ளிகளுடன் லிவர்பூல் 3ஆம் நிலையிலும் உள்ளது. நப்போலியுடனான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே லிவர்பூல் இரண்டாம் சுற்றுக்குள் நுழைய முடியும்.

இதர ஆட்டங்களில் அட்லெண்டிகோ மாட்ரிட் அணி 2 என்ற கோல் எண்ணிக்கையில் மொனாகோ அணியை வீழ்த்தியது. பொரிஸியா கோலின்றி கிளப் புர்காவுடன் சமநிலை கண்டது. இந்த எ பிரிவில் அட்லெண்டிகோ மாட்ரிட். பொரிஸியா ஆகிய அணிகள் இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்துள்ளன.

பி பிரிவில் பிஎஸ்ஜி அணியை 1 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்திய பார்சிலோனா அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் டோட்டன்ஹம் 1 என்ற கோல் எண்ணிக்கையில் இண்டர் மிலானை வென்றது. இறுதி ஆட்டத்தில் பார்சிலோனாவை வீழ்த்தினால் மட்டுமே டோட்டன்ஹம் இரண்டாம் சுற்றுக்குள் நுழைய முடியும்.

டி பிரிவில் போர்த்தோ, ஷல்கா அணிகள் இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்துள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன