ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > 2.0 திரைப்பட வெளியாகி முதல் நாளில் மலேசியாவில் வெ.2,730,000 வசூல் சாதனை
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

2.0 திரைப்பட வெளியாகி முதல் நாளில் மலேசியாவில் வெ.2,730,000 வசூல் சாதனை

கோலாலம்பூர், நவ 30
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகினது.

இதற்கு முன்னர் வெளியான எந்திரன் திரைப்படத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகளவில் 10,000க்கும் மேற்பட்ட திரையரங்களில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில், மலேசியாவில் மட்டும் படம் வெளியான முதல் நாளான நேற்று வெ.2,730,000 வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மலேசியாவில் ரஜினிகாந்திற்கு ஏராளமான தீவிர ரசிகர்கள் உள்ளன. இந்த வசூல் அதனை நிரூபித்துள்ளது.

3D மற்றும் 2Dயில் வெளியாகியுள்ள இப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் திரையரங்குகளில் திரள்கின்றனர். அதோடு, நவீன தொழில்நுட்ப முறையில் எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன