ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > கவனத்தை ஈர்க்கும் கனா பட ட்ரைலர்; எதிர்பார்ப்பில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

கவனத்தை ஈர்க்கும் கனா பட ட்ரைலர்; எதிர்பார்ப்பில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘கனா படத்தின் ட்ரைலர் வெளியாகி அவரது ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது.

மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாகவும், அவருக்குத் தந்தையாக சத்யராஜும் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிந்து படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இதில் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் படத்தின் ட்ரைலரை, சிவகார்த்திகேயன் மற்றும் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்டுள்ளனர்.

ட்ரைலரில் உள்ள காட்சிகள் உணர்வுபூர்வமாகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. படத்துக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் நிறைய உழைத்துள்ளது ட்ரைலரில் தெரிகிறது. இதில் சிவகார்த்திகேயனின், நீ எது பேசுறதா இருந்தாலும் ஜெயிச்சுட்டு பேசு போன்ற ஊக்குவிக்கும் டயலாக்ஸ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன