புதன்கிழமை, ஜனவரி 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மேல் முறையீடு செய்வேன் -டத்தோ சிவராஜ் சந்திரன்
அரசியல்முதன்மைச் செய்திகள்

மேல் முறையீடு செய்வேன் -டத்தோ சிவராஜ் சந்திரன்

கோலாலம்பூர், நவ 30
14ஆவது பொது தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் தாம் வெற்றி பெற்றது செல்லாது என நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யவிருப்பதாக அத்தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சிவராஜ் சந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பை தாம் ஏற்றுக் கொள்வதாக கூறிய அவர் அத்தொகுதி பூர்வகுடி மக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுவதை மறுத்துள்ளார்.

தாம் எந்தவொரு லஞ்ச ஊழலிலும் சம்பந்தப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய தனது வழக்கறிஞரை பணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன