சனிக்கிழமை, டிசம்பர் 15, 2018
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > கேமரன் மலை தேர்தலில் ஊழல்: எம்ஏசிசி விசாரணையைத் தொடங்கியது!
அரசியல்குற்றவியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

கேமரன் மலை தேர்தலில் ஊழல்: எம்ஏசிசி விசாரணையைத் தொடங்கியது!

கோலாலம்பூர், டிச. 3-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), மே 9 பொதுத்தேர்தலின்போது, பகாங், கேமரன் மலையில் நடந்த தேர்தல் ஊழல்களை விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

விசாரணை ஆவணம் அதற்கான கோப்பைத் திறந்துள்ளதாகவும் ஆனால், அதில் மிகக் குறைந்த தகவல்களே இருப்பதாக துணைத் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அஸாம் பாக்கி கூறியுள்ளதாக தெ நியூ ஸ்டிரெயிட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

விசாரணை தொடங்கியுள்ளது, ஆனால் விசாரிக்கப்படுவது யார் என்று என்னால் இப்போது சொல்ல முடியாது. விசாரணையில் ஏதாவது புதிய தகவல்கள் இருந்தால், பிறகு அறிவிப்போம் என்று அவர் தெரிவித்தார். கடந்த வெள்ளியன்று, தேர்தல் நீதிமன்றம் கூடிய கேமரன் மலையில் மஇகா வேட்பாளரான சி.சிவராஜாவின் வெற்றியை ரத்து செய்தார்.

தேர்தல் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து, கூட்டரசு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப் போவக்தாக அத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராஜா குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கேமரன் மலையில் இடைத்தேர்தல் வந்தால், மஇகா வேட்பாளருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்க உள்ளதாகப் தேசிய முன்னணித் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஸாஹிட் ஹமிடி கூறியுள்ளதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன