வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அதிகாரம் சுய நலனுக்காக அல்ல! – டாக்டர் மகாதீர்
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

அதிகாரம் சுய நலனுக்காக அல்ல! – டாக்டர் மகாதீர்

புத்ராஜெயா, டிச. 3-

ஆட்சியாளர்களுக்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகாரம் பணிகளை முறையாக மேற்கொள்வதற்குத் தானே தவிர சுய நலனுக்காக அல்ல என்று பிரதமர், துன் டாக்டர் மகாதீர் முகமட் வலியுறுத்தினார்.

அப்படி அதிகாரம் துஷ்பிரயோகிக்கப்பட்டால் நாடு மேம்பாடு காணாது, மாறாகப் பொதுமக்களின் வாழ்க்கை பாதித்து விடும். அதனால் நமக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்திற்கேற்பப் பணியை மேற்கொள்வதில் நாம் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

இதில் நாம் இம்மாதிரியான அதிகாரம் நாட்டிற்கு நல்லதல்ல என்று விழிப்பு நிலையில் அல்லது எச்சரிக்கையுடன் இருந்தால் அதைச் செயல்படுத்தாமல் முறையாகப் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று பிரதமர் துறையின் மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய போது மகாதீர் குறிப்பிட்டார்.

அரசு அமைக்கப்பட்டது உண்மையில் மலேசியாவை மேம்பாடடைந்த நாடாக உருவாக்குவதற்கு ஆகும் என்பதை பொதுச்சேவை ஊழியர்கள் உட்பட மேலதிகாரிகளும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இதில் தொடக்கக்கட்டத்தில் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியவில்லை என்றாலும் ஓர் அமைதியான மற்றும் மேம்பாடடைந்த நாட்டை உருவாக்கி விட்டால் அதன் பலனை அமைச்சர்கள் உட்பட பொதுமக்களும் அனுபவிப்பர். அதனால் நகர்புற மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க நாட்டின் செல்வாக்கை சரிசமமான முறையில் விநியோகிக்க வேண்டும்.

அந்நிலையை லஞ்ச ஊழல், இனங்களுக்கு இடையிலான கலவரம் ஏதுமில்லாமல் நாட்டை முறையாக நிர்வகித்தால் நாம் அடைய முடியும். பொதுவாக நாம் கலவரத்தை எதிர்நோக்கும் போது அதை முதிர்ச்சித்தன்மையுடன் சமூக அக்கறை கொண்டவராக ஆட்சி முறையின் நோக்கத்தை அறிந்து தீர்வு காண முற்பட வேண்டும்.

மலேசியர்கள் அனைவரும் செல்வாக்கு மிக்கவர்களாய் இருப்பதைக் காணத்தான் அரசு விரும்புகிறது. இதில் நகர்புற வளர்ச்சி மற்றும் செல்வாக்கைத் தடுக்க அரசு எண்ணவில்லை. ஆனால் அப்படி பணக்கார மற்றும் வசதி குறைந்தோருக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து விட்டால் பொறாமையும் வெறுப்பும் ஏற்பட்டு நகர் வசதி குறைந்த மக்கள், இனங்களுக்கு இடையிலான பகைமைதான் நாட்டில் ஏற்படும்.

அதனால் பிரதமர் துறையில் உள்ள அனைவரும் தங்களின் வேலை முறை மட்டுமின்றி நாட்டின் தேவை குறித்தும் அறிந்து வைத்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என லங்காவி தொகுதி எம்.பி.யுமான மகாதீர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன