புதன்கிழமை, ஏப்ரல் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > முட்டி மோதும் காயத்ரி – தமிழிசை சௌந்தரராஜன்!
இந்தியா/ ஈழம்கலை உலகம்முதன்மைச் செய்திகள்

முட்டி மோதும் காயத்ரி – தமிழிசை சௌந்தரராஜன்!

சென்னை, டிச. 4-

தமிழிசை சௌந்தரராஜனை தலைவர் பதவியிலிருந்து நீக்கினால்தான் பாஜக வளர்ச்சி பெறும் என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார் .

தமிழக பாஜக கட்சிக்குள் தற்போது ஒரு பெரிய போர் நடந்து கொண்டு இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். போரின் ஒரு பக்கத்தில் இருப்பது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

இன்னொரு பக்கத்தில் இருப்பவர் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம். காயத்ரி ரகுராம் பாஜகவில் இருக்கிறாரா இல்லையா என்பது பெரிய விவாதம் ஆகி, தற்போது பாஜகவின் தலைவர் யார் என்று வரை இந்த பிரச்சனை சென்று சேர்ந்து இருக்கிறது.

கடந்த வாரம் சென்னையில் நடந்து விழா ஒன்றில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பிய காயத்ரி ரகுராம் மது அருந்தி வாகனம் ஒட்டியதாக போலீசாரால் குற்றஞ்சாட்டப்பட்டார்.

இதையடுத்து, இதற்கு பதில் சொன்ன காயத்ரி ரகுராம்., நான் மது குடித்துவிட்டு எல்லாம் வாகனம் ஓட்டவில்லை. மது குடித்ததாக பொய் சொல்கிறார்கள். நான் தமிழக பாஜகவில் இருக்கிறேன். அதனால்தான் என்னை இப்படி நெருக்குகிறீர்கள். பாஜகவில் இருப்பதால் என்னை பழிவாங்குகிறார்கள், என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்த தமிழிசை காயத்ரி ரகுராமுக்கும் பாஜகவிற்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் தமிழக பாஜகவில் உறுப்பினாராக இல்லை. அவர் பொய் சொல்கிறார். அவரை எப்போதோ பாஜகவில் இருந்து நீக்கிவிட்டோம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் செல்வதற்காக அவரே பாஜகவில் இருந்து விலகிவிட்டார் என்று கூறினார்.

அதற்கு காயத்ரி அதில், நான் இன்னும் பாஜகவில்தான் இருக்கிறேன். தமிழக பாஜக தலைவருக்கு இது கூட தெரியவில்லை. தமிழிசை சௌந்தரராஜனை தலைவர் பதவிலிருந்து நீக்கினால்தான் தமிழக பாஜக வளர்ச்சி பெறும், அப்போதுதான் தமிழ்நாட்டில் பாஜக வெற்றிபெறும், என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன