ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > பேட்ட ரஜினியின் மரண மாஸ் பாடல் : சமூக தளங்களில் வைரல்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

பேட்ட ரஜினியின் மரண மாஸ் பாடல் : சமூக தளங்களில் வைரல்

சென்னை டிச 4-

இளம் நடிகர்களுக்கு அமைக்கும் அதே மாஸ் போன்ற பாடலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கொடுத்துள்ளார் அனிருத்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு காண்கின்றது. இந்நிலையில் அனிருத் இசையில் மரண மாஸ் பாடலை எஸ்.பி.பி. பாடியுள்ளார். மரண மாஸ் பாடலின் உருவாக்கம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் இசை சும்மா மாஸாகவே உள்ளது என்று கூற வேண்டும். சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள அந்த மேக்கிங் வீடியோ ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

எஸ்பி பாலசுப்ரமணியம் குரலில் ஒலிக்கும் இந்த பாடல், அனைவரையும் கவர்ந்துள்ளது. பல நாட்டுப்புற இசைக் கருவிகளின் பயன்பாட்டில் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளதும் கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

இந்த பொங்கல் தல பொங்கல் மட்டும் அல்ல தலைவர் பொங்கலும் கூட. ரசிகர்கள் எல்லாம் மரண வெயிட்டிங்கில் உள்ளனர். பேட்ட பொங்கலை கொண்டாடித் தீர்க்க ரசிகர்கள் ஏற்கனவே தயாராகிவிட்டனர்.

பொங்கலுக்கு வெளிவரும் திரைப்படங்களில் மக்களின் முதன்மை எதிர்பார்ப்பை பெற்ற படமாக பேட்ட விளங்குகின்றது. அதோடு சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படமும் பொங்கல் வெளியீடு என கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன