வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > சென்னையில் மீண்டும் வெள்ள எச்சரிக்கை…!
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

சென்னையில் மீண்டும் வெள்ள எச்சரிக்கை…!

கஜா புயல் காரணமாக சிதைந்து போயிருக்கும் டெல்டா மாவட்டங்களின் சில பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் அங்கு வெள்ள எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கின்றது.

நாகை, நாகூர், வேளாங்கண்ணி, கீழையூர் பகுதிகள் உட்பட, புதுக்கோட்டை மாவட்டத்திலும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

அதேவேளையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், துாத்துக்குடி , காரைக்கால் மாவட்டங்களில், இன்று சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அதே போல திருவள்ளூர் மாவட்டத்தின் வடகடலேராப்பகுதி, பொன்னேரி , எண்ணூர், திருவெற்றியூர்,பெரியபாளையம், கும்மிடிபூண்டி, சிவகங்கையின் காரைக்குடி திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது

மழை நீடிப்பதால் புயல் நிவாரணப் பணிகள் பாதிப்பு அடைந்திருக்கின்றன.

கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் உட்பட இன்னும் பல இடங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, பொது மக்கள் கவனமுடனும் பாதுக்காப்புடனும் இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன