புதன்கிழமை, ஏப்ரல் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > சீபில்ட் ஆலய வன்செயல் தொடர்பில் 83 பேர் கைது -ஐஜிபி தகவல்
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

சீபில்ட் ஆலய வன்செயல் தொடர்பில் 83 பேர் கைது -ஐஜிபி தகவல்

கோலாலம்பூர், டிச. 4
சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த வன்செயல் தொடர்பில் இதுவரை 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் புசி ஹருண் தெரிவித்துள்ளார்.

இந்த வன்செயல் தொடர்பில் விசாரணைக்கு உதவும் பொருட்டும் மேலும் பலரை போலீஸ் தீவிரமாக தேடி வருவதாக அவர் சொன்னார்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் அதில் அடங்குவர். புக்கிட் அமான் குற்றப்புலனாய் பிரிவு அவர்களை தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று வரை 83 ஆடவர்கள் புலன் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் சட்டத்தை மீறியவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

அந்த ஆலயத்தில் நிகழ்ந்த வன்செயல் தொடர்பில் விசாரணைக்கு உதவக்கூடிய 28 நபர்களின் புகைப்படங்களை புக்கிட் அமான் குற்றப்புலனாய் பிரிவு நேற்று வெளியிட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன