ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > சபரிமலை ஐயப்பன் கோவில் முடிவு மறுஆய்வு
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவில் முடிவு மறுஆய்வு

சபரிமலை ஐயப்பன் கோவில் முடிவை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் அடுத்தாண்டு ஜனவரியில் விசாரணைக்கு வருகின்றன.

சபரிமலை ஐயப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பல்வேறு அமைப்பினர் தாக்கல் செய்திருக்கும் மறுஆய்வு மனுக்கள், அடுத்த மாதம் ஜனவரியில், உச்ச நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வருகின்றன.

உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பை எதிர்த்து சபரிமலை மட்டுமின்றி கேரள மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றதால் சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்திருக்கிறது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மறுஆய்வு மனுக்களும் விசாரிக்கப்பட விருக்கின்றன.

கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுக்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று, கேரள அரசு நேற்று திங்கட்கிழமை புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன