வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > தாஜுடின், இப்ராகிம் அலி இருவரும் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர வேண்டும் – பொன்.வேதமூர்த்தி
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

தாஜுடின், இப்ராகிம் அலி இருவரும் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர வேண்டும் – பொன்.வேதமூர்த்தி

புத்ராஜெயா, டிச. 04-

கடந்த மூன்று நாட்களாக பாசிர் சாலாக் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்-பினர் டத்தோஸ்ரீ தாஜுடன் அப்துல் ரகுமானும் பெர்க்காசா தலைவர் டத்தோ இப்ராகிம் அலியும் என்னைப் பற்றி பொய்யும் அவதூறுமான அறிக்கைகளை வெளியிட்டு வருவதுடன் முஸ்லிம் மற்றும் மலாய்க்காரர்களை நான் அவமரி-யாதை செய்துவிட்டதைப் போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றனர் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு எதிரான இந்தக் கடுமையான குற்றச்சாட்டும் வெறுப்பான பேச்சும் அம்னோவும் பாஸ் கட்சியும் வரும் சனிக்கிழமை டிசம்பர் 8-ஆம் நாளில் ஐநா மன்றத்தின் இன சமன்பாட்டு ஒப்பந்தத்திற்கு(ஐசெர்ட்) எதிராக தலைநகரில் கூட்டாக ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு ஆதரவாக மக்களைத் திரட்டுவதற்-காக அவர்களை சினமூட்டி ஆவேசப்படுத்தும் நடவடிக்கை ஆகும்.

நாடாளுமன்றத்தில் ஐசெர்ட் மீதான கேள்விக்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன் பதில் அளித்தது முதலே நான் குறி வைக்கப்பட்டுள்ளேன். எனவே, எனக்கு எதிராக சுமத்தப்படும் கடுமையான குற்றச்சாட்டும் குறைகூறலும் உள்நோக்கத்-துடன் வெளிப்படுத்தப்படும் அப்பட்டமான பொய்க்கூற்றுகளாகும்.

எனவே, இவ்விரு தலைவர்களும் எனக்கெதிரான தங்களின் அண்மைய அறிக்-கைகளை மீட்டுக் கொள்ள 24 மணி நேர அவகாசம் அளிக்கிறேன். இல்லாவிடில் மானநட்ட வழக்கைச் சந்திக்க நேரிடும். என் பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்க இதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

தாஜுடின் அப்துல் ரகுமான், இப்ராகிம் அலி இருவரின் அறிக்கைகளும் நாட்டின் ஒற்றுமைக்கும் மக்களின் ஒருமைப்பாட்டிற்கும் எந்த வகையிலும் உதவப் போவதில்லை; மாறாக பல-இன, பல-சமய, பல-பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட பன்முகத் தன்மை கொண்ட நாடான மலேசியாவிற்கு கடுகளவும் பொறுத்தம் இல்லாதன என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான ‘செனட்டர் பொன்.வேதமூர்த்தி தன் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன