அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மாநில ஆட்சியைக் கவிழ்க்கச் சதியா ? டத்தோஸ்ரீ அமாட் பைசால் மறுப்பு
அரசியல்முதன்மைச் செய்திகள்

மாநில ஆட்சியைக் கவிழ்க்கச் சதியா ? டத்தோஸ்ரீ அமாட் பைசால் மறுப்பு

ஈப்போ டிச 4
பேரா மாநில ஆட்சியைக் கவிழ்க்க பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சதி செய்வதாக வெளி வந்துள்ள தகவலை மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமாட் பைசால் வன்மையாக மறுத்துள்ளார்.

பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த தெபிங் திங்கி சட்டமன்ற உறுப்பினர் அசிஸ் பாரி ஆதரவை தேடி தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் டத்தோ சராணி முகமட் சட்டமன்றத்தில் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து சர்ச்சையானது.

இது குறித்து டத்தோஸ்ரீ அமாட் பைசாலிடம் கேட்டபோது. ஆட்சியை எளிதில் கவிழ்க்க முடியாது. பக்காத்தான் ஹராப்பானின் கடும் முயற்சியால் ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டது. எனவே, ஆட்சியை சுலபமாக கவிழ்க்க முடியாது.

இந்ந ஆட்சியின் மூலம் நாட்டின் மேம்பாட்டிற்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும் செய்ய வேண்டிய கடமைகளை செய்வோம். தேவையில்லா வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவர் சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன