வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > திரையரங்கில் விஸ்வாசம் மோசன் போஸ்டர் கெத்து காட்டும் மலேசிய தல ரசிகர்கள்.
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

திரையரங்கில் விஸ்வாசம் மோசன் போஸ்டர் கெத்து காட்டும் மலேசிய தல ரசிகர்கள்.

கோலாலம்பூர், டிச. 5-

2019இ ல் ஜனவரி பொங்கல் ஸ்பெஷலே விஸ்வாசம் படம் தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படமும் அன்றைய நாள் வெளிவருகின்றது. ஆனால் அந்த திரைப்படத்திற்கு இணையான பேராதரவை விஸ்வாசமும் பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது.

அஜித்தின் ரசிகர்கள் விஸ்வாசம் திருவிழா என ஹெஸ்டேக் போட்டு கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக 700 க்கும் அதிகமான திரையரங்குகளில் தமிழ் நாட்டில் படம் வெளிவரவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ்நாட்டைத் தாண்டி அஜித்திற்கு வெளிநாட்டிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். மலேசியாவில் இருக்கும் ரசிகர்கள் அஜித் நற்பணி மன்றத்தின் தலைவர் தேவேந்திரன் தலைமையில் பல நல்ல விசயங்களை சமூக நல நோக்குடன் செயல்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் மோசன் போஸ்டரை முதல் முறையாக டிஎஸ்ஆர் சினிபெலைக்ஸ் திரையரங்கில் டிசம்பர் 9ஆம் தேதி திரையிடுகிறார்கள். இதனால் மலேசிய அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன