ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > பிரிமியர் லீக் : மன்செஸ்டர் சிட்டியை தடுப்பது யார்?
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

பிரிமியர் லீக் : மன்செஸ்டர் சிட்டியை தடுப்பது யார்?

லண்டன், டிச. 5-

இவ்வாண்டுக்கான இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்வதில் மன்செஸ்டர் சிட்டி உறுதியாக இருக்கின்றது. குறிப்பாக இதுவரையில் நடந்த அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியே காணாத அணியாக அது விளங்குகின்றது.

முன்னதாகஈன்று புதன்கிழமை அதிகாலை நடந்த ஆட்டத்திலும் வாட்பெர் அணியை மன்செஸ்டர் சிட்டி சந்தித்து விளையாடியது. இதில் 68 விழுக்காடு ஆட்டத்தை முழுமையுமாக ஆக்கிரமித்த மன்செஸ்டர் சிட்டி 1-2 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.

மன்செஸ்டர் சிட்டி அணிக்கான முதல் கோலை 41ஆவது நிமிடத்தில் லோரா சானே அடித்தார். பின்னர் பிற்பாதியின் 51ஆவது நிமிடத்தில் ரியாட் மாரேஸ் தமது அணிக்கான இரண்டாவது கோலை போட்டார். இதனால் 0-2 என்ற கோல் எண்ணிக்கையில் மன்செஸ்டர் சிட்டி முன்னிலை பெற்றது. இருப்பினும் ஆட்டத்தின் 85ஆவது நிமிடத்தில் டௌகோர் வாட்பெர்ட் அணிக்கான கோலை அடித்தார். இதனால் ஆட்டம் 1-2 என்ற கோல் எண்ணிக்கையில் முடிவடைந்தது.

புதன்கிழமை நடந்த இதர ஆட்டங்களில் ஏஎப்சி பொனர்போத் அணி 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் ஹடல்பில்ட்ஸ் அணியை வென்றது. பிரைட்டன் 3-1 என்ற கோல் எண்ணிக்கையில் கிறிஸ்டல் பெலெஸ் அணியை வீழ்த்திய வேளையில் வெஸ்ட் ஹெம் யுனைடெட் 3-1 என்ற கோல் எண்ணிக்கையில் கார்டிப் சிட்டியை தோற்கடித்தது.

15 ஆட்டங்களை முடித்துக் கொண்டுள்ள மன்செஸ்டர் சிட்டி அணி 41 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றது. இதுவரையில் 13 ஆட்டங்களில் வெற்றியும் 2 ஆட்டங்களில் மன்செஸ்டர் சிட்டி சமநிலை கண்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன