வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > சீபில்ட் ஆலய வன்செயல் தொடர்பில் இதுவரை 99 பேர் கைது -டான்ஸ்ரீ முகமட் புஸி ஹருண்
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

சீபில்ட் ஆலய வன்செயல் தொடர்பில் இதுவரை 99 பேர் கைது -டான்ஸ்ரீ முகமட் புஸி ஹருண்

கோலாலம்பூர், டிச. 5 
சீபில்ட் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய வன்செயல் தொடர்பில் நேற்று 83 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் புஸி ஹருண் தெரிவித்துள்ளார்.

இவர்களை அனைவரையும் சேர்த்து இதுவரை 99 பேர் இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

கடந்த நவம்பர் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் சீபில்ட் ஆலயக் கலவரத்தில் சம்பந்தப்பட்ட இவர்கள் அனைவரும் கிள்ளான் பள்ளத்தாக்கில் கைதானதாகத் தெரிவித்தார்.

இன்று காலை வரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 99 என கோலாலம்பூரில் போலீஸ் பயிற்சி மையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன