வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறுக -டத்தோ சிவராஜ்ஜிற்கு மக்களவை சபாநாயகர் உத்தரவு
அரசியல்முதன்மைச் செய்திகள்

நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறுக -டத்தோ சிவராஜ்ஜிற்கு மக்களவை சபாநாயகர் உத்தரவு

கோலாலம்பூர், டிச. 5
ஊழல் காரணமாக கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோ சிவராஜின் வெற்றி செல்லாது என தேர்தல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து அதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் மக்களவையிலிருந்து வெளியேறும்படி நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோ முகமட் அரிப் முகமது யூசோப் அவருக்கு உத்தரவிட்டார்.

கடந்த நவம்பர் 30ஆம் தேதி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக சிவராஜ் தடை உத்தரவு பெற்றுள்ளாரா என ஆர்எஸ்என் ராயர் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபிறகு சபாநாயகர் இந்த உத்தரவை வெளியிட்டார்.

நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உங்களிடம் தடை உத்தரவு இருக்கிறதா இல்லையா என சபாநாயகர் மக்களவையில் டத்தோ சிவராஜிடம் கேட்டதற்கு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய தமக்கு 14 நாள் அவகாசம் இருக்கிறது என சிவராஜ் பதிலளித்தார்.

எனினும் இந்த விஷயம் குறித்து நான் முடிவு செய்தாக வேண்டும் என சபாநாயகர் தெரிவித்தார். உங்களிடம் தடை உத்தரவு இருக்கிறதா இல்லையா. உங்களின் மேல்முறையீடு குறித்து முடிவு செய்ய சட்டநிபுணரை நீங்கள் காண்பது நல்லது என சபாநாயகர் ஆலோசனை கூறினார்.

தனது வழக்கறிஞர்களை சந்தித்த விளக்கம் பெற்று பின் சபாநாயகரை சந்திக்கிறேன் என்று சிவராஜ் கூறினார்.

எனினும், இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்பதால் நான் உத்தரவை வெளியிட வேண்டியது உள்ளது சபாநாயகர் குறிப்பிட்டார். தயவு செய்து மக்களவையை விட்டு வெளியேறுங்கள். தடை உத்தரவை பெறுங்கள் முகமது அரிப் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன