சென்னை, டிச. 6-
இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018ஆம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சல்மான் கான் இந்த ஆண்டில் ரூ.253.35 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (ரூ.66.75 கோடியுடன்) 11ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
ரஜினிகாந்த் (ரூ.50 கோடி) 14ஆவது இடத்தையும், தளபதி விஜய் (ரூ.30.33 கோடி) 26ஆவது இடத்திலும், விக்ரம் (ரூ.26 கோடி) 29ஆவது இடத்திலும் உள்ளனர். சூர்யா (ரூ.23.67 கோடி), விஜய் சேதுபதி (ரூ.23.67 கோடி) இருவரும் 34ஆவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தனுஷ் (ரூ.17.65 கோடி) 53ஆவது இடத்திலும், டாப்சி (ரூ.15.48 கோடி) 67ஆவது இடத்திலும், நயன்தாரா (ரூ.15.17 கோடி) 69ஆவது இடத்திலும், கமல்ஹாசன் (ரூ.14.2 கோடி) 71ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இதில் தல அஜித் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.