புதன்கிழமை, ஏப்ரல் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > ஆசியான் சுசுகி கிண்ணம்: இறுதி ஆட்டத்தில் மலேசியா!
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

ஆசியான் சுசுகி கிண்ணம்: இறுதி ஆட்டத்தில் மலேசியா!

பேங்காக், டிச. 6-

இவ்வாண்டுக்கான ஆசியான் சுசுகி கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு மலேசியா தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக புதன்கிழமை இரவு நடந்த ஆட்டத்தில் தாய்லாந்து அணியுடன் சமநிலை கண்டாலும் எதிரணி அரங்கில் கோல் அடித்த காரணத்திற்காக மலேசியா இறுதி ஆட்டத்திற்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

முதல் அரையிறுதி ஆட்டம் கடந்த சனிக்கிழமை புக்கிட் ஜாலில் அரங்கில் நடந்தது. இந்த ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது. இதனிடையே புதன்கிழமை இரவு நடந்த ஆட்டத்தில் தாய்லாந்துடன் மலேசியா 2-2 என்ற கோல் எண்ணிக்கையில் சமநிலை கண்டது.

ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்தில் மலேசிய ஆட்டக்காரர் இர்ஃபான் ஸகாரியா சொந்த கோல் அடித்ததால் தாய்லாந்து முன்னிலை பெற்றது. இருப்பினும் 28ஆவது நிமிடத்தில் முகமட் ஷாமி மலேசிய அணிக்கான கோலை அற்புதமாக அடித்தார். இதனால் முதல்பாதி ஆட்டம் 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் சமநிலையில் முடிந்தது.

பிற்பாதி ஆட்டம் தொடங்கியதும் தாய்லாந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக அவ்வணிக்கான 2ஆவது கோலை பன்ஸா ஹெவின்பூம் அடித்தார். 71ஆவது நிமிடத்தில் மலேசிய அணிக்கான கோலை நர்ஸாதுல் தஹாலா அடித்தார். அதன் பின்னர் தாய்லாந்து அணியை கோல் அடிக்க விடாமல் மலேசிய ஆட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். இறுதியில் ஆட்டம் 2-2 என்ற கோல் எண்ணிக்கையில் சமநிலையில் முடிந்தது. எதிரணி அரங்கில் கோல் அடித்த காரணத்திற்காக மலேசியா இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.

சுசுகி கிண்ண இறுதி ஆட்டம் டிசம்பர் 11ஆம் தேதியும் மற்றொரு ஆட்டம் 15ஆம் தேதியும் நடக்கின்றது. மலேசியா இந்த இறுதி ஆட்டத்தில் வியட்நாம் அணியை சந்திக்க அதிக வாய்ப்புள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன