புதன்கிழமை, ஏப்ரல் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > பெர்ன்லியின் முரட்டுத்தனமான ஆட்டம் – லிவர்புல் நிர்வாகி அதிருப்தி !
விளையாட்டு

பெர்ன்லியின் முரட்டுத்தனமான ஆட்டம் – லிவர்புல் நிர்வாகி அதிருப்தி !

பெர்ன்லி, டிச.6 –

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் தோல்வியே காணாத தனது சாதனையை லிவர்புல் தக்க வைத்துக் கொண்டுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்புல் 3 – 1 என்ற கோல்களில் பெர்ன்லி அணியை வீழ்த்தியது.

ஒரு கோலில் பின் தங்கியிருந்த லிவர்புல், இறுதியில் 3 கோல்களைப் போட்டு வெற்றிப் பெற்றுள்ளது. இந்த பருவத்தில் நடந்த 15 ஆட்டங்களில் 12- ல் வெற்றிப் பெற்றுள்ளது. அதேவேளையில் 3 ஆட்டங்களில் சமநிலைக் கண்டு புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

பெர்ன்லிக்கு எதிரான ஆட்டத்தில் அவ்வணி வெளிப்படுத்திய முரட்டுத்தனமான ஆட்டத்தில் லிவர்புல் நிர்வாகி ஜூர்கென் குலோப் அதிருப்தி அடைந்துள்ளார். குறிப்பாக இங்கிலாந்து தற்காப்பு ஆட்டக்காரர் ஜோ கோமேஸ் முரட்டுத்தனமாக தாக்கப்பட்டதால் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே வெளியேற்றப்பட்டார்.

இந்த விவகாரத்தில் லிவர்புல் நிர்வாகியிடம் தாம் மன்னிப்புக் கோரப் போவதில்லை என பெர்ன்லி நிர்வாகி ஷான் டீச் தெரிவித்துள்ளார். இந்த ஆட்டத்தில் பெர்ன்லி முரட்டுத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் ஓர் ஆட்டக்காரருக்கு மட்டுமே மஞ்சள் அட்டைக் கொடுக்கப்பட்டது குறித்து குலோப் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன