புதன்கிழமை, ஏப்ரல் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > வசூலில் அபார பாய்ச்சல் – ரூ. 500 கோடியைத் தொட்ட 2.0!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

வசூலில் அபார பாய்ச்சல் – ரூ. 500 கோடியைத் தொட்ட 2.0!

2.0 படம் ரூ. 500 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த 2.0 படம் ரிலீஸான மூன்றே நாட்களில் உலக அளவில் ரூ. 200 கோடி வசூல் செய்தது. அதன் பிறகு அடுத்த நாளே ரூ. 200 கோடி வசூலித்தது. இந்நிலையில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது 2.0.

2.0 படம் ரிலீஸான ஒரே வாரத்தில் உலக அளவில் ரூ. 500 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

ரூ. 500 கோடி வசூல் செய்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது 2.0. இது போன்ற சாதனைகளை சூப்பர் ஸ்டாரால் மட்டுமே செய்ய முடியும் என்கிறார்கள் அவரின் தீவிர ரசிகர்கள்

லைகா நிறுவனத்தின் ட்வீட்டை பார்த்த ரஜினி ரசிகர்கள் 2.0 படம் இந்த வார இறுதியில் ரூ. 700 கோடியை தொடும் என்கிறார்கள். தலைவர் மீது உள்ள நம்பிக்கை.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன