வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > உங்கள் தலைமைத்துவத்தில் கருப்புப் புள்ளி! சபாநாயகரிடம் பொங்கி எழுந்தார் டத்தோஸ்ரீ சரவணன்
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

உங்கள் தலைமைத்துவத்தில் கருப்புப் புள்ளி! சபாநாயகரிடம் பொங்கி எழுந்தார் டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர், டிச. 6-

கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சிவராஜ் சந்திரனை நாடாளுமன்ற கூட்டத்திலிருந்து வெளியேற்றியது தவறு. உங்கள் தவறை திருத்திக் கொண்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் டத்தோ சிவராஜை அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் அது உங்கள் தலைமைத்துவத்தில் முதல் கருப்பு புள்ளி என நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோ முகமட் அரிப் நோக்கி கூறி டத்தோஸ்ரீ சரவணன் நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

வியாழக்கிழமை கூடிய நாடாளுமன்ற கூட்டத்தில் டத்தோஸ்ரீ சிவராஜ் சந்திரனை புதன்கிழமை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றியது குறித்து விவாதம் நடந்தது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார்கள். குறிப்பாக, அம்னோ, பாஸ் கட்சியின் தலைவர்கள் சிவராஜ் சந்திரனை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றியது தவறான நடவடிக்கை என கூறினார்கள்.

இது குறித்து டத்தோஸ்ரீ சரவணன் கருத்துரைத்தபோது, தேர்தல் ஆணைய சட்டவிதிக்குட்பட்டு எந்த நடவடிக்கையும் முன்னெடுக்க வேண்டும். கேமரன்மலை நாடாளுமன்ற உறுப்பினரை அவையிலிருந்து வெளியேற்றியது மிகப் பெரிய தவறு. அவரை மீண்டும் அவைக்குள் அழைக்க வேண்டும். அதை நீங்கள் (சபாநாயகர்) செய்யத் தவறினால் உங்களது பணிக் காலத்தில் இந்த சம்பவம் கருப்புப் புள்ளியாக இடம் பெறும் என டத்தோஸ்ரீ சரவணன் எச்சரித்தார்.

அப்போது அரங்கத்தில் கூடியிருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாகக் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். இதனிடையே, பாசீர் சாலே நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ தஜுடின், ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின், எதிர்க்கட்சித் தவைவரும் பாகான் டத்தோக் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி உட்பட எதிர்க்கட்சியிலுள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவராஜ் சந்திரனுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்கள்.

டத்தோ சிவராஜ் சந்திரனை அவையிலிருந்து வெளியேறச் சொன்னது கேமரன் மலை வாக்காளர்களையும் குடியிருப்பாளர்களையும் அவமதிப்பதற்கு சமம் என அவர்கள் கூறினார்கள். இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பில் தமக்கு இன்னும் தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை என்பதால் திங்கட்கிழமை இது குறித்து தாம் முடிவு செய்வதாகவும் அதுவரையில் தாம் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோ முகமட் அரிப் கூறினார்.

இதுகுறித்து கருத்துரைத்த மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், நாடாளுமன்றத்தில் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் சிவராஜ் சந்திரனை இழிவுப்படுத்தியது ஜசெகவிற்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுக்கும். அதோடு, கேமரன் மலையில் ஜசெகவின் தோல்வி இதனால் உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன