திங்கட்கிழமை, ஜூன் 1, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பேரணிக்காக விடுமுறையா?
அரசியல்முதன்மைச் செய்திகள்

பேரணிக்காக விடுமுறையா?

கோலாலம்பூர், டிச. 6-

ஐசெர்ட் எனப்படும் இனப் பாகுபாட்டை ஒழிப்பது மீதான அனைத்துலக சாசனம் ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்க பேரணி நடத்தப்படுவதை முன்னிட்டு, வரும் ஞாயிற்றுக்கிழமை விழாக்கால விடுமுறையை கிளந்தான் மாநில பாஸ் அரசு அறிவித்திருப்பதை பிகேஆர் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடினார்.

இந்தப் பேரணியில் மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய அரசோ அல்லது மாநில அரசோ விடுமுறை அளிப்பது தேவைற்றது என அவர் குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக விடுமுறை வழங்குவது தேவையற்றது என்பது என்னுடைய கருத்து என அவர் நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஐசெர்ட் நிராகரிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்க வரும் சனிக்கிழமை பேரணி நடத்தப்படுவதை முன்னிட்டு கிளந்தான் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை விழாக்கால விடுமுறை அளிக்கப்படுவதாக கிளந்தான் மந்திரிபுசார் டத்தோ அகமது யாக்கோப் கூறியிருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை டத்தாரான் மெர்டேக்காவில் நடத்தப்படும் அந்தப் பேரணியில் கிளந்தான் மாநில மக்களும் கலந்து கொள்வதற்கு ஏதுவாக இந்த விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன