வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > இந்திய சிறுவன் சித்ரவதையால் மரணம்! குருக்கள் தந்தை கைது
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

இந்திய சிறுவன் சித்ரவதையால் மரணம்! குருக்கள் தந்தை கைது

காஜாங், டிச. 6-

10 வயது இந்திய சிறுவன் சித்ரவதை செய்யப்பட்டதால் மரணம் அடைந்தான். இதன் தொடர்பில் அவனுடைய தந்தை விசாரணைக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று காஜாங் போலீஸ் தலைவர் ஏசிபி அகமது ஜபிர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட நபர் செமினி வட்டாரத்தில் அனைவருக்கும் நன்கு அறிமுகமான குருக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் 5ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் ராகவ் ஷர்மா எனும் அந்த சிறுவன் சுயநினைவு இழந்த நிலையில் செர்டாங் மருத்துவமனையில் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டதாக காஜாங் குற்றப் புலனாய்வுத் துறைக்கு புகார் வந்தது. அந்த சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர் அவன் இறந்து விட்டதை உறுதி செய்தார்.

சிறுவனின் தலையிலும், உடலிலும், கை, கால்களிலும் காயங்கள் இருந்தது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது. அதோடு, சிறுவனின் உடல் முழுவதும் வீக்கங்கள் இருந்துள்ளன. சவப் பரிசோதனையில் உடல் முழுவதும் காயங்கள் இருந்தது சவப்பரிசோதனையில் தெரிய வந்தது. சிறுவனின் தந்தை சந்தேகத்தின் பேரில் டிசம்பர் 6ஆம் காலை 9.30 மணிக்கு செமினி போலீஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலிருந்து டிசம்பர் 7ஆம் தேதி போலீசார் அனுமதி பெற்றனர்.

கைதான நபர் செமினி வட்டாரத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் அர்ச்சகராக வேலை செய்து வந்துள்ளார். 43 வயதான அந்த நபர் குற்றவியல் சட்டம் பிரிவு 302 கீழ் விசாரணை செய்யப்படுகின்றார். மரணமுற்ற சிறுவன் ராகவ் ஷர்மா செமினி தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவராவார். இவன் அந்த வட்டாரத்தில் நடத்தப்பட்ட தேவாரப் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றிகள் பெற்றவன் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கைது செய்யப்பட்ட அந்த சிறுவனின் தந்தை டிசம்பர் 5ஆம் தேதி இரவு போலீஸ் புகார் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதில் தாம் மந்தின் மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்தபோது, தமது மகள் தம்மை தொடர்புக் கொண்டு, தமது மகன் எழுந்திருக்கவில்லை என கூறியதாக கூறியுள்ளார். பின்னர் வீட்டிற்கு விரைந்து சென்று அவனை மருத்துவமனையில் அனுமதித்தபோது தமது மகன் இறந்து விட்டதாக கூறியது தமக்கு அதிர்ச்சி அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு மரணமடைந்த சிறுவனின் உடபில் காயம் ஏற்பட்டது எப்படி என தெரியவில்லை என்றும் போலீஸ் புகார் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன