புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > மனித உரிமை நாள் கொண்டாட்டம் முன்னரே திட்டமிடப்பட்டது – சுஹாகாம் !
முதன்மைச் செய்திகள்

மனித உரிமை நாள் கொண்டாட்டம் முன்னரே திட்டமிடப்பட்டது – சுஹாகாம் !

கோலாலம்பூர், டிச.7-

மனித உரிமை நாள் கொண்டாட்டத்தை டிசம்பர் 8 ஆம் தேதி நடத்துவதற்கு அக்டோபர் மாதமே முடிவு செய்யப்பட்டதாக சுஹாகாம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் டான் ஶ்ரீ இஸ்மாயில் தெரிவித்தார். நாளை சனிக்கிழமை நடைபெற திட்டமிடப்பட்டுள்ள ஐசெர்ட் பேரணிக்கு தொந்தரவு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சுஹாகாம் தமது மனித உரிமை பேரணியை நாளை நடத்தவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 18 ஆம் தேதியே, மனித உரிமை பேரணிக்கான நாள் தேதி முடிவு செய்யப்பட்டதாகவும், பிரதமர் அலுவலகமே அந்த தேதியை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். எனவே ஐசெர்ட் பேரணிக்கு போட்டியாக நாங்கள் பேரணி நடத்துகிறோம் என்ற கூற்றில் உண்மையில்லை என டான் ஶ்ரீ இஸ்மாயில் மேலும் தெரிவித்தார்.

அமைதியான முறையில் பேரணிகளை நடத்துவதற்கு சுஹாகாம் என்றும் ஆதரவு வழங்கி வந்துள்ளதாக இஸ்மாயில் தெரிவித்தார். இந்நிலையில் சனிக்கிழமை சுஹாகாம் நடத்தவிருக்கும் பேரணியில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கலந்து கொள்ள விருக்கிறார். இது ஐசெர்ட் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பேரணி என பரப்பப்படும் விஷம பிரச்சாரம் சுஹாகாம்மின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன