புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > கோப்பா டெல் ரே – மெலிலாவை பந்தாடியது ரியல் மாட்ரிட் !
சமூகம்விளையாட்டு

கோப்பா டெல் ரே – மெலிலாவை பந்தாடியது ரியல் மாட்ரிட் !

மாட்ரிட், டிச.7-

ஸ்பெயின் கோப்பா டெல் ரே கிண்ண கால்பந்துப் போட்டியில், இறுதி 16 கிளப்புகளுக்கான சுற்றுக்கு ரியல் மாட்ரிட் தகுதிப் பெற்றுள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 6 – 1 என்ற கோல்களில் மெலிலாவை வீழ்த்தியது.  இதன் மூலம் , 10 – 1 என்ற மொத்த கோல் எண்ணிக்கையில் ரியல் மாட்ரிட் அடுத்த சுற்றில் கால் பதித்துள்ளது.

19 முறை கோப்பா டெல் ரே கிண்ணத்தை வென்றுள்ள ரியல் மாட்ரிட்,  கடந்த மாதம் நடைபெற்ற ஆட்டத்தில் மெலிலாவை அதன் சொந்த அரங்கில் 4 – 0 என்ற கோல்களில் வீழ்த்தியது. இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் நிர்வாகி சந்தியாகோ சொலாரி, 10 மாற்றங்களை செய்திருந்தார்.

கோல் காவலர் தீபாவட் கோர்த்துவா, மத்திய திடல் ஆட்டக்காரர் லுக்கா மொட்ரிட், தாக்குதல் ஆட்டக்காரர்கள் கேரத் பேல், கரீம் பென்சிமா, கேப்டன் செர்ஜியோ ராமோசுக்கு ஓய்வு வழங்கினார். முதல் பாதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் மூன்று கோல்களைப் போட்டு முன்னணிக்கு சென்றது.

மார்க்கோ அசென்சியோ இரண்டு கோல்களைப் போட்ட வேளையில் ஹாவி சன்சேஸ் மற்றொரு கோலைப் போட்டார்.  இரண்டாம் பாதி ஆட்டத்தில் இஸ்கோ இரண்டு கோல்களைப் போட்டு ரியல் மாட்ரிட்டை ஐந்து கோல்களில் முன்னணியில் வைத்தார். பிரேசிலின் வினிசியூஸ் ஜூனியர் போட்ட ஆறாவது கோல் ரியல் மாட்ரிட்டின் மிகப் பெரிய வெற்றியை உறுதிச் செய்தது. இந்த ஆட்டத்தில் மலிலாவின் ஒரே கோலை யாசினி கஸ்மி அடித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன