ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பிடிபிடிஎன் கடனாளிகளின் சம்பளத் தொகைப் பிடித்தம்: நிதியமைச்சு தீர்மானிக்கவில்லை -லிம் குவான் எங் 
அரசியல்முதன்மைச் செய்திகள்

பிடிபிடிஎன் கடனாளிகளின் சம்பளத் தொகைப் பிடித்தம்: நிதியமைச்சு தீர்மானிக்கவில்லை -லிம் குவான் எங் 

பெட்டாலிங் ஜெயா, டிச 9
பிடிபிடிஎன் கடனாளிகளுக்கான திட்டமிடப்பட்ட சம்பளத் தொகைப் பிடித்தத்தைக் கல்வி அமைச்சுதான் தீர்மானித்ததே தவிர நிதியமைச்சு அல்ல என்று அதன் அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சுக்கும் அதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. இந்த விவகாரம் குறித்து கல்வி அமைச்சு ஏற்கனவே பேசியிருக்கும் என்று தாம் கருதுவதாகவும் இவை அனைத்தும் அமைச்சரவையின் முடிவாகும் என சிலாங்கூர் மாநில ஜசெகவின் மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் குவான் எங் குறிப்பிட்டார்.

முன்னதாக இந்த பிஜிபி திட்ட அமலாக்கம் பிடிபிடிஎன் கடனாளிகள், அரசியல்வாதிகள் உட்பட பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது.

இத்திட்டம் 2,000 வெள்ளி மற்றும் அதற்கும் மேல் சம்பளம் பெறும் பிடிபிடிஎன் கடனாளிகளின் சம்பளத் தொகையிலிருந்து பிடித்தம் செய்ய 2 முதல் 15 விழுக்காடு வரை அமல்படுத்தப்படும் என்று பிடிபிடிஎன் தலைவர் வான் சைபுல் வான் ஜான் ஜான் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமிருந்து விமர்சனங்கள் வந்ததைத் தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் 1ஆம் தேதி அமல்படுத்தப்படவிருந்த பிஜிபி திட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகக் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலெக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன