வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > கால்பந்து வீரரை நாடுகடத்த தயாராகும் தாய்லாந்து!
உலகம்முதன்மைச் செய்திகள்விளையாட்டு

கால்பந்து வீரரை நாடுகடத்த தயாராகும் தாய்லாந்து!

பேங்காக், டிச.10-

ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்து, அரசியல் அகதி அந்தஸ்து பெற்ற பஹ்ரைன் கால்பந்தாட்ட வீரரை கைது செய்துள்ள தாய்லாந்து அரசு அவரை மீண்டும் பஹ்ரைனுக்கு நாடுகடத்த திட்டமிட்டிருக்கின்றது.

ஹக்கீம் அலி அல்அரைபி என்ற அந்த வீரர், தான் பஹ்ரைனுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அரசு குடும்பத்தை விமர்சித்ததற்காக சிதர்வதை செய்யப்பட்டு கொல்லப்படுவேன் என அஞ்சுகின்றார்.

பஹ்ரைன் தேசிய அணியின் முன்னாள் வீரரான அவர் மீது காவல்நிலையத்தை தீயிட்டு கொழுத்தியதாக பஹ்ரைன் அரசு குற்றஞ்சாட்டுகிறது. அவர் நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில், ஹக்கீமுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் அரசின் குற்றச்சாட்டை மறுக்கும் ஹக்கீம், 2011 அரபு வசந்தத்தின் போது நடந்த அமைதி போராட்டங்களில் அரசு குடும்பத்தை எதிர்த்ததால் வீரர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக கூறியிருக்கிறார்.

அத்துடன், காவல்நிலையத்தை தீயிட்டு கொழுத்தியதாக சொல்லும் நேரத்தில் தான் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் அவ்விளையாட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.  இந்த அச்சுறுத்தல் காரணமாக 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த ஹக்கீமுக்கு, ஆஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் கைதானது ஏன்?

இந்த நிலையில், தாய்லாந்தில் விளையாடச் சென்ற அவரை இண்டர்போல் விடுத்த சிவப்பு நோட்டீஸ் அடிப்படையில் தாய்லாந்து கைது செய்துள்ளது. பஹ்ரைனின் கோரிக்கைக்கு இணங்க அவரை நாடுகடத்த தாய்லாந்து அரசு முடிவெடுத்திருக்கும் நிலையில், இறுதி முடிவு நீதிமன்றத்தின் கையில் இருக்கின்றது. இந்த நிலையில், சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிபா ஹக்கீமை ஆஸ்திரேலியாவுக்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

“அந்த அகதியை ஒப்படைக்க வேண்டும் என்ற பஹ்ரைனின் கோரிக்கையை தாய்லாந்து பரிசீலித்ததே அவமானகரமானது” எனக் கூறியிருக்கிறார் ஆசிய பசிபிக் அகதி உரிமை அமைப்பின் திட்ட அலுவலர் சுசி ப்ராபக்ரானந்த்.

ஐ.நா.வின் அகதிகள் சாசனத்தில் கையெழுத்திடாத தாய்லாந்து, அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களை ஆபத்தான நாடுகளுக்கு நாடுகடத்துவதில் மோசமான இடத்தில் இருந்து வருகின்றது. இவ்வாறான சூழலில், பல்வேறு தரப்பிலிருந்து அந்த கால்பந்தாட்ட வீரரை விடுவிக்கக் கோரி தாய்லாந்துக்கும் மீட்கக்கோரி ஆஸ்திரேலியாவுக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன