வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மீண்டும் நாடாளுமன்றத்தில் டத்தோ சிவராஜ்
அரசியல்முதன்மைச் செய்திகள்

மீண்டும் நாடாளுமன்றத்தில் டத்தோ சிவராஜ்

கோலாலம்பூர், டிச 10

மீண்டும் மக்களவைக்கு செல்ல டத்தோ சிவராஜ்ஜிற்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோ முகமட் அரிப் முகமட் யூசோப் அறிவித்தார்.

முன்னதாக ஊழல் காரணமாக கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோ சிவராஜின் வெற்றி செல்லாது என தேர்தல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து அதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் மக்களவையிலிருந்து வெளியேறும்படி நாடாளுமன்ற சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார்.

இது மிகப் பெரிய சர்ச்சையானது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு திங்கட்கிழமை பதிலளிப்பதாக சபாநாயகர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற முதல் சந்திப்பு கூட்டத்தின் போது நீதிமன்றத்தில் டத்தோ சிவராஜின் மேல்முறையீடு வழக்கு முடியும் வரை அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் நாடாளுமன்றத்திற்கு வருகை புரியலாம் என்றும் டத்தோ முகமட் அரிப் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன