திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்

கோலாலம்பூர், டிச. 10-

மலேசிய இந்திய வர்த்தக கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடந்த பெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது 2018இல் முதன்மை வர்த்தகர் விருதை பிரிக்பீல்ட்ஸ் ஆசிய கல்லூரியின் நிர்வாக இயக்குநர் ராஜசிங்கம் வென்றார். இந்த விருதை இவருடன் சேர்ந்த இதர இருவருக்கும் வழங்கப்பட்டது. செல்லம் வான்டேஷன் குருப் நிர்வாக இயக்குநர் டத்தோ வெங்கடசெல்லம், ஏபிஎஸ் மஞ்சா செண்டிரியான் பெர்ஹாட்டின் நிர்வாக இயக்குநர் டத்தோ ஏபி சிவம் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

அதோடு, சிறந்த தொழில்துறைக்கான சிறப்பு விருது 21 இளம் இந்திய தொழில்முனைவர்களுக்கு வழங்கப்பட்டது. தினகரநபன் பத்மநாபன், திருவெங்கடேஷ் சண்முகம், குமரகுரு, டேனியன் லுவிஸ், மோகன்ராஜ் தங்கராஜன், குளோரி ஜோன்சன், மார்க் ஜுரியல் பிலிப், புவரசு செல்வராஜு, கணேசன் முத்து, தேவராஜா, சஞ்ஜெய்டாஸ், பேராஜு கிருஷ்ணன், டத்தின் வாணி ராமு, டத்தோஸ்ரீ டாக்டர் என்.கிருஷ்ணமூர்த்தி, லோகநாதன் சுப்ரமணியம், சூரியாவதி ராமுமூர்த்தி, டத்தோ சரவணன் சுப்ரமணியம், எஸ்.எம்.மகேந்திரன் சுப்ரமணியம், சிவலிங்கம் வி.பொன்னாயா, கோகுலன் துரைராஜு, கிருஷ்ணாபிள்ளை ஆகியோருக்கு சிறந்த தொழில்துறைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.

இந்த விருது விழாவில் சிறந்த விளையாட்டு வீராங்கனையான டத்தோ ராஜமணி மயில்வாகனம், ஜுரிக் நிறுவனத்தைச் சேர்ந்த சந்திரன், ஸ்டார் மீடியா குழுமத்தைச் சார்ந்த எலன் பெருமாள், ஸ்காய் புளு மீடியாவைச் சேர்ந்த டத்தோ மணிகண்டமூர்த்தி வேலாயுதம், லிடர்நோமிக்ஸைச் சேர்ந்த ரோஷேந்திரன், மலேசிய கேஸட்டைச் சேர்ந்த நோராய்னி அப்துல் ரசாக், மசாலா வில்சைச் சேர்ந்த குகன் பதி, ரவீந்திரன் சுப்ரமணியம் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

மலேசிய இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து தமக்கு ஏற்பாட்டுக் குழுவினர் விளக்கம் அளித்ததாகவும் அதற்கான நடவடிக்கைகளை நம்பிக்கைக் கூட்டணி அரசு நிச்சயம் முன்னெடுக்கும் என பிரதமர் துறையின் ஒற்றுமை அமைச்சர் பொன் வேதமூர்த்தி நம்பிக்கை தெரிவித்தார். 13 ஆண்டுகளாக இந்த விருது விழாவை சிறப்பாக நடத்தி வரும் ஏற்பாட்டுக் குழுவிற்கும் அதன் தலைவர் மதுரைவீரன் மாரிமுத்துவிற்கும் அவர் தமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.

இனி வரும் காலங்களில் இம்மாதிரியான விருது விழாக்கள் தொடர வேண்டும். அது வர்த்தகர்களுக்கு புது தெம்பை தரும் என கூறிய அவர், அரசாங்கமும் இந்திய வர்த்தகர்களுக்கான உதவிகளை தொடர்ந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என உறுதியளித்தார்.

இந்த விருது விழாவில் பல வேலை அலுவல்களுக்கு மத்தியிலும் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்த அமைச்சர் பொன் வேதமூர்த்திக்கு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மதுரைவீரன் மாரிமுத்து நன்றியினை தெரிவித்துக் கொண்டார். 2005ஆம் ஆண்டு தொடக்கம் இளம் இந்திய தொழில் முனைவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பெர்டானா விருது விழா நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

ஆசிய கண்டத்தை பொறுத்தவரை தொழில்துறையின் மேம்பாடு கோடிக்கணக்கான வியாபாரத்தை எட்டியுள்ளது. வர்த்தகத் துறையின் சிறப்பாக செயல்பட்டால் இந்தியர்களுக்கு சிறந்த பொருளாதார பலத்தை கொண்டிருப்பார்கள். அந்த அடிப்படையில் வெற்றி பெற்ற இந்தியர்களை சமுதாயத்தின் மத்தியில் கொண்டு வந்து இளைய தலைமுறையினர் வர்த்தகத்தின் ஈடுபட வேண்டும் என ஊக்குவிக்கும் நோக்கத்தில் விருது விழா நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

இந்திய வர்த்தகர்கள் தங்களின் வர்த்தக வாய்ப்புகளை உயர்த்திக் கொள்ள அரசு எல்லா நிலைகளிலும் உதவி புரிய வேண்டும். சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு அரசு வர்த்தக கடன் உதவிகளை வழங்கும் பட்சத்தில் தங்களின் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் வாய்ப்பு வர்த்தகர்களுக்கு வழங்கப்படும். இது அவர்களின் பொருளாதாரத்தையும் பெரும் அளவு உயர்த்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். மலேசிய இந்தியர்கள் பொருளாதாரம் உயர்வு காண வர்த்தக துறைதான் சிறந்த தளம். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும். வர்த்தகர்கள் உருவாக்கப்பட்டால் நமது சமுதாயத்தின் அடிப்படை பிரச்னைகளுக்கு நாமே தீர்வு காணலாம் என மதுரைவீரன் மாரிமுத்து குறிப்பிட்டார்.

அதோடு, இந்த பெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது 2018 விழா மிகச் சிறப்பாக நடைபெற உதவிக்கரம் நீட்டிய ஆதரவு அளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் இந்த விருது விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் என்றும் மதுரைவீரன் மாரிமுத்து கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன