வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > கேமரன் மலை விவகாரம்: மஇகா மேல்முறையீடு செய்யவில்லை; தேர்தலை சந்திக்கின்றோம் -டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்
அரசியல்முதன்மைச் செய்திகள்

கேமரன் மலை விவகாரம்: மஇகா மேல்முறையீடு செய்யவில்லை; தேர்தலை சந்திக்கின்றோம் -டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், டிச 10-

கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோ சிவராஜ் சந்திரனின் வெற்றி செல்லாது என தேர்தல் நீதிமன்றம் அறிவித்ததை தொடர்ந்து, அதன் தொடர்பில் மஇகா மேல் முறையீடு செய்யாது என அதன் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் திட்டவட்டமாகக் கூறினார்.

நீதிமன்றத்தின் முடிவில் நம்பிக்கை இல்லை என்பதன் காரணத்திற்காக தேர்தலை சந்திக்க போவதாக இன்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய செயலவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

கேமரன் மலை வழக்கை பொறுத்தவரை டத்தோ சிவராஜ் நேரடியாக யாருக்கும் பணம் வழங்கியதாக எந்தக் குற்றச்சாட்டையும் நீதிபதி முன் வைக்கவில்லை. குறிப்பாக, பணம் பட்டுவாடா நடந்திருக்கிறது என்பதை மட்டுமே குறிப்பிட்டார்கள். இருப்பினும் இந்தத் தேர்தல் செல்லாது என அவர்கள் அறிவித்திருப்பது மஇகாவின் நம்பக தன்மையை இழக்கும் வகையில் இருக்கின்றது.

இந்த விவகாரம் தொடர்பில் மஇகா மேல் முறையீடு செய்தால் அங்கு தங்களுக்கு சாதகமாக பதில் கிடைக்குமா என்பதே மிகப்பெரிய கேள்வி குறியாக இருக்கும் நிலையில் மக்களை நேரடியாக சந்திப்பதுதான் மிகச் சிறந்த வழியாக இருக்கும் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

மஇகாவை பொறுத்தவரை கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் ஜசெகவை வீழ்த்துவதற்கான வாய்ப்புகள் மிகப் பிரகாசமாக இருப்பதாகவும் அது குறித்து மத்திய செயலவையில் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்திய செயலவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவானது கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா இந்தியர்களின் வாக்குகளை பெறும் வழிமுறைகள் குறித்து ஆய்வு காணப்படும் என்று அவர் கூறினார்.

முன்னதாக கேமரன் மலை இந்திய வாக்காளர்களை பொறுத்தவரையில் கடந்த முறையை காட்டிலும் இந்த முறை அதிகமான வாக்குகளை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. தேர்தலில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் நிறைவேற்றாதது, அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்தியர்களின் நடவடிக்கைகள் என இந்திய சமுதாயத்திற்கு என்ன சலுகைகள் கிடைத்திருக்கின்றது என்பதை இந்தச் சமுதாயம் சிந்தித்து பார்த்தால் கண்டிப்பாக மஇகாவிற்கு அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாம் இந்தத் தொகுதியில் போட்டியிடுகின்றோம்.

மேல் முறையீடு செய்து அதில் நேரத்தை செலவழிக்காமல் நேரடியாக மக்கள் சந்திப்பதாக கூறினார். அதுமட்டுமின்றி, சீபில்ட் ஆலய விவகாரம், பரவாசி மாநாடு குறித்த பல விவகாரங்கள் இந்த மத்திய செயலவை கூட்டத்தில் பேசப்பட்டது.

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோ சிவராஜ்தான் வேட்பாளரா என்ற கேள்விக்கு, டத்தோ சிவராஜூடன் இதர சில வேட்பாளர்களும் அடையாளம் காணப்படுவார்கள் என்றும் அவர்களில் யார் சிறந்த வேட்பாளரோ அவரே இந்த நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார்கள் என்றும் அவர் பதிலளித்தார்.

மஇகாதான் இந்தத் தொகுதியில் போட்டியிடும். அதில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன