நஜீப், அருள்கந்தா மீது நாளை குற்றச்சாட்டு

0
7

புத்ராஜெயா, டிச.11
1எம்டிபியின் முன்னாள் குழுமத் தலைவரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான அருள்கந்தா கந்தசாமி எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் இன்று கைது செய்யப்பட்டார்.

இன்று காலை 10.30 மணியளவில் எம்ஏசிசி தலைமையகத்தில் அருள்கந்தா கைது செய்யப்பட்டதை அவரது வழக்கறிஞர் டத்தோ என்.சிவானந்தன் உறுதி செய்தார்.

1எம்டிபி கணக்கறிக்கையை மாற்றியமைத்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் அவர் மீது நாளை குற்றஞ்சாட்டப்படும்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கும் அருள்கந்தாவுடன் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்று அவர் சொன்னார்.

எம்ஏசிசியின் சட்டம் பிரிவு 23இன் கீழ் 1 குற்றச்சாட்டு அருள்கந்தா மீது சுமத்தப்படலாம் என்று சிவானந்தன் சொன்னார்.

டத்தோஸ்ரீ நஜீப் மற்றும் அருள்கந்தா மீது மட்டுமே நாளை குற்றஞ்சாட்டப்படும். மற்றவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படுமா என்பது தெரியவில்லை என்று அவர் கூறினார்.

நேற்று காலை 9.30 மணியளவில் எம்ஏசிசி அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்ட பிறகு நஜீப் கைதானார். பிற்பகல் 1.30 மணியளவில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.