கோலாலம்பூர், டிச. 12
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் அண்மையில் திரையீடு கண்ட 2.0 திரைப்படம் உலக அளவில் மிகப் பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி வருகின்றது. மலேசியாவிலும் இத்திரைப்படம் மிகப் பெரிய வசூல் வேட்டையை நடத்தியுள்ளது.

குறிப்பாக இதுவரையில் (டிசம்பர் 11) 1 கோடியே 60 லட்சம் வெள்ளியை இத்திரைப்படம் வசூலித்திருப்பதாக 2.0 திரைப்படத்தை மலேசியாவில் வெளியீடு செய்த DMY கிரியேசன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அந்நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் மலேசியாவில் முதல் முறையாக ஒரு திரைப்படம் இந்த அளவிற்கு வசூல் வேட்டையை நடத்தியதில்லை என்பதையும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. முதல் முறையாக ஒரு தமிழ்ப்படம் 16 மில்லியன் வசூலை ஈட்டியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியாவில் திரைப்படங்களை வெளியிடும் நிறுவங்கள் மொதுவாகவே தங்களின் வசூல் நிலவரத்தை வெளியிடாத நிலையில் 2.0 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 27 லட்சம் என அதிரடியாக அறிவித்த DMY கிரியேசன்ஸ், இப்போது 1 கோடியே 60 லட்சம் வெற்றியை இத்திரைப்படம் வசூலித்துள்ள தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.