புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய்

கோலாலம்பூர், டிச 12-

மெர்சல் படத்திற்காக சிறந்த சர்வதேச நடிகருக்கான ஐஏஆர்ஏ விருது லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது. IARA எனப்படும் சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் என்ற அமைப்பு சர்வதேச அளவில் கலைஞர்களை கவுரவித்து வருகின்றது.

நாடகம், சினிமா, இசை, தொலைக்காட்சி ஆகிய துறைகளில் மொத்தம் 24 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஐஏஆர்ஏ விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

மெர்சல் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகர், சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய 2 பிரிவுகளில் விஜய்யின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதில் சிறந்த சர்வதேச நடிகருக்கான விருது விஜய்க்கு கிடைத்துள்ளது. லண்டனில் நடந்த விழாவில் விஜய்க்கு விருது வழங்கி கவரவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஐஏஆர்ஏ விருதை கையில் வைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.

One thought on “சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன