யூடிசி சேவை நேரம் மாற்றம்

0
12

கோலாலம்பூர், டிச.13-
யூடிசி எனப்படும் புறநகர் உருமாற்ற மையத்தின் சேவை நேரம் ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி மாற்றப்பட்டுள்ளது. தீபகற்ப மலேசியா, சபா, சரவா மாநிலங்களிலும் செயல்படும் யூடிசி மையங்களின் சேவை நேரம் தினசரி காலை 8 மணி தொடங்கி இரவு 7.00 மணி வரை நீடிக்கும். தற்போது யூடிசி மையங்கள் இரவு 10.00 மணி வரை திறந்துள்ளன.

தீபகற்ப மலேசியாவில் உள்ள யூடிசி மையங்களில் ஓய்வு நேரம் அல்லது வெள்ளிக்கிழமை தொழுகைக்கான நேரம் நண்பகல் 12.15 தொடக்கம் பகல் 2.45 மணி வரைக்கும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சபா லாபுவானில் இதற்கான நேரம் காலை 11.30 தொடங்கி பகல் 2.00 மணி வரையாகும்.

யூடிசி மையங்கள் மாநில மற்றும் கூட்டரசு பொது விடுமுறை தினங்களில் மூடப்படும்.