மீண்டும் பிகேஆர் உதவித் தலைவராக ரபிஸியா?

0
4

கோலாலம்பூர், டிச. 13
பிகேஆர் தேசிய உதவித் தலைவராக ரபிஸி ரம்லி மீண்டும் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

2018 2021 தவணைக்கான பிகேஆர் தலைமைத்துவத்தின் பதவிகளுக்கு நியமனம் செய்யப்படுவோரில் இவரும் அடங்குவார் என கூறப்படும் வேளையில் இதனை தாம் நிராகரிக்கவில்லை என பிகேஆர் தொடர்பு துறை தலைவர் பாபி பட்சில் தெரிவித்துள்ளார்.

கட்சிக்கு ஆதரவு வழங்கும் தனி நபர்களுக்கு தகுந்த பதவி வழங்க தாம் தயாராக இருப்பதாக பிகேஆர் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியதன் அடிப்படையில் இந்த சாத்தியத்தை தாம் நிராகரிக்க முடியாது என்று அவர் கூறினார்.

பட்டியலில் ரபிஸி பெயரும் இருக்கலாம் என்றும் தலைமைத்துவ முழு நிர்வாக உறுப்பினர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பாபி பட்சில் கூறினார்.

பிகேஆர் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ரபிஸி, டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலியிடம் தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.