முன்னாள் தகவல் அமைச்சர் டான்ஸ்ரீ ஸைனுடின் மைடின் காலமானார்

0
3

கோலாலம்பூர், டிச. 14
முன்னாள் தகவல் அமைச்சர் டான்ஸ்ரீ ஸைனுடின் மைடின் இன்று காலமானார்.

79 வயதான டான்ஸ்ரீ ஸைனுடின் நுரையீரல் பிரச்னையின் காரணமாக புத்ரா ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த நவம்பர் 12ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு நுரையீரலில் நீர் கோர்த்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர், செர்டாங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்று அவர் காலமானார்.

ஸாம் என்று அழைக்கப்படும் ஸைனுடின் கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டு வரை துன் அகமட் படாவியின் தலைமைத்துவத்தில் தகவல் அமைச்சராகவும் உத்துசான் மலேசியா நாளேட்டின் தலைமை ஆசிரியராகவும் இருந்துள்ளார்.