வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > அம்னோவில் இருந்து வெளியேறுகிறேனா ?? நம்பாதீர்கள் – இட்ரிஸ் ஜூசோ !
முதன்மைச் செய்திகள்

அம்னோவில் இருந்து வெளியேறுகிறேனா ?? நம்பாதீர்கள் – இட்ரிஸ் ஜூசோ !

கோலாலம்பூர், டிச.15 –

அம்னோவில் இருந்து தாம் வெளியேறப் போவதாக வெளிவந்திருக்கும் செய்திகளை நம்ப வேண்டாம் என முன்னாள் உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ இட்ரிஸ் ஜூசோ தெரிவித்துள்ளார்.  பெர்னாமாவுக்கு அனுப்பிய வாட்ஸ் ஆப் செய்தியில் இட்ரிஸ் ஜூசோ இவ்வாறு தெரிவித்தார்.

உலுத் திரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோ ரோசோல் வாஹிட், அம்னோவில் இருந்து வெளியேறி இருப்பதை அடுத்து தாமும் அம்னோவில் இருந்து வெளியேறப் போவதாக வெளிவந்திருக்கும் தகவல்களில் உண்மையில்லை என இட்ரிஸ் ஜூசோ தெரிவித்தார்.

அம்னோவில் இருந்து வெளியேறிய ரோசோல் வாஹிட், தற்போது பிரிபூமி பெர்சத்து கட்சியில் இணைந்திருக்கிறார். ரோசோல் வெளியேறியுள்ள பட்சத்தில், திரெங்கானுவில் தற்போது தேசிய முன்னணிக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதி மட்டுமே எஞ்சியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன