அரசாங்கத்தில் இனி இடம்பெற மாட்டேன் – நூரூல் இசா அன்வார்

0
4

பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரான நூரூல் இசா அன்வார், தமது, கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் பதவியையும், பினாங்கு கெஅடிலான் தலைவர் பதவியையும், துறந்துள்ளார்.

டத்தோ ஶ்ரீ அன்வாரின் மகளான இவர், தமது உறுதியான முடிவை, கட்சியின் தலைமைத்துவத்திடம் அறிவித்துள்ளார். அதோடு மக்களுக்கு சேவை சேய, உயர் பதவிகளில் இருக்க வேண்டிய அவசியமைல்லை என்று கூறியுள்ளார்.

தமது 18-வது வயதில், அரசியலில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட நூரூல் தற்போது, பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடையாம் மட்டுமே தமக்கு போதும் எனவும், அதில் மட்டுமே கவனம் செலுத்தி செயல்பட போவதாகவும், கூறியுள்ளார்.

நிபோங் திபால், நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மன்சோர் ஒத்மானுக்கு பதிலாக , னாங்கு கெஅடிலான் தலைவராக நூரூல் நேற்று ஞாயிற்றுகிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

இனி அரசாங்கத்தில் தாம் எந்தவொரு பதவியையும் வகிக்க போவதில்லை என்று கூறிய அவர், பினாங்கு மாநில அரசு சார்ந்த நிறுவனங்களில் ஆற்றும் தமது பங்கை கட்சி நிர்வாகத்திடமே ஒப்படைத்துவிடுவதாகவும் தமது அறிக்கையின் மூலம் இந்த திடீர் அறிவிப்பைத் தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த முடிவுகளுக்கு பின்பு, நிச்சயம் ஒரு முக்கிய நோக்கம் இருக்கும் என்று பரவலாக கூறப்படுகிறது. குடும்ப அரசியல் என்ற பேச்சுக்கு இடம் கொடுக்க கூடாது என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும்
கணிப்புகள் கூறுகின்றன.

அதேவேளையில், அரசாங்க சீர்த்திருத்தங்களிலும் எந்த பதவியையும் வகிக்கபோவதில்லை என்று கூறிய அவர், பொது கணக்குக் குழுவில் செயற்குழு உறுப்பினராக இருப்பதை முடிவுச் செய்ய கட்சி தலைமைத்துவத்திடம் விட்டு விட்டதாகவும் கூறினார்.