முகப்பு > கலை உலகம் > மீண்டும் இணைந்து வருகிறார்கள் பிரபாஸ் – அனுஷ்கா..!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

மீண்டும் இணைந்து வருகிறார்கள் பிரபாஸ் – அனுஷ்கா..!

பாகுபலியின் பிரபலத்தை அடுத்து,  மீண்டும் இணைகிறது பிரபாஸ் – அனுஷ்கா ஜோடி. ‘சாஹோ’ படத்தை தொடர்ந்து பிரபாஸ் அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தில் பிரபாசுடன் இணைந்து நடிக்க அனுஷ்கா ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பாகுபலி படம் மூலம் இணைந்த பிரபாஸ் – அனுஷ்கா இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்றும் செய்தி வெளியானது.   இந்த கிசுகிசுக்களுக்கு பயந்தே இருவரும் இணைந்து நடிப்பதை தவிர்த்து வந்தவர்கள். இப்போது ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.
பிரபாஸ் நடிக்கும் `சாஹோ’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகி வருகிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ராதா கிருஷ்ணகுமார் இயக்கும் புதிய படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளார். சில மாதங்களுக்கு முன் இந்தப் படத்தின் பணிகள் பூஜையுடன் ஆரம்பமானது.
இந்தப் படமும் தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாக உள்ளது.
இந்தப் படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் வரும் முக்கியக் கதாபாத்திரத்தில் எந்த நடிகையை நடிக்க வைக்கலாம் எனப் படக்குழு தேடிவந்தது. அழுத்தமான அந்தக் கதாபாத்திரத்தில் அனுஷ்காவை நடிக்கவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனுஷ்காவும் மீண்டும் பிரபாசுடன் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டராம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன