முகப்பு > சமூகம் > தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டில் கவனம் செலுத்துவோம்! பெட்டாலிங் ஜெயா தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் அறிவுறுத்தல்
சமூகம்முதன்மைச் செய்திகள்

தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டில் கவனம் செலுத்துவோம்! பெட்டாலிங் ஜெயா தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் அறிவுறுத்தல்

பெட்டாலிங் ஜெயா, டிச. 17-

ஆரம்பக் கல்வியே வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்கும் என்பதை உணர்ந்து பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் 1990ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குப் போகலாம் என்று கூட நிகழ்ச்சியை மூன்றாம் ஆண்டாக நடத்தினர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியிடத்தில் இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியை நடத்தி வந்ததாகவும் இவ்வாண்டு கல்வி பயின்ற பள்ளியிலேயே நடத்தியதாகவும் இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திலகேந்திரன் மகாலிங்கம் தெரிவித்தார்.

கல்வி கற்ற இடம் தான் நம் வாழ்க்கைக்கு அடித்தளமாக இருந்தது என்பதனை மறந்து விடக்கூடாது என்ற நோக்கில் ஆண்டுதோறும் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடத்தி வருவதாகவும் இந்நிகழ்ச்சியில் இருந்து பெறப்பட்ட 3,000 பள்ளியை பள்ளி வளர்ச்சிக்காக நன்கொடையாக வழங்கியதாகவும் அவர் கூறினார்.

3 ஆண்டுகளுக்கு முன்பு, பெட்டாலிங் ஜெயா தமிழ்ப்பள்ளியில் 1990ஆம் ஆண்டு தொடக்கம் 1995ஆம் ஆண்டுவரை படித்த முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் பணியை சங்கத்தின் தலைவர் சண்முகநாதன் முன்னெடுத்தார். அவரின் தலைமைத்துவத்தில் 3 ஆண்டுகளாக இந்த ஒன்றுகூடல் சிறப்பான முறையில் நடந்து வருவதாகவும் திலகேந்திரன் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பள்ளியின் தலைமையாசிரியர் பாலசுப்ரமணியம் உரையாற்றுகையில், முன்னாள் மாணவர்களால் நடத்தப்படும் இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி மிகவும் வரவேற்கத்தக்கது என்றார். குறிப்பாக ஆரம்ப கல்வியை கற்று முடித்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றளவும் பள்ளிக்கு உதவி புரிய வேண்டும் என்ற முன்னாள் மாணவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது என அவர் புகழாரம் சூட்டினார்.

அதோடு மேலும் பள்ளிக் கட்டடத்தில் சில மாற்றங்களை கொண்டு வர இருப்பதாகவும் குறிப்பாக இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப பள்ளி விரைவில் இரண்டு மாடிக் கட்டடமாக உருவாகும் என அவர் தெரிவித்தார்.

அதற்கு பள்ளியின் மேலாளர் வாரியம் பெற்றோர் ஆசிரியர் சங்கம் முழுமையான ஆதரவினை வழங்கி வருகின்றன அவர்களுக்கு இவ்வேளையில் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும் தலைமையாசிரியர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ராஜன் கூறுகையில், இதர பள்ளியில் இல்லாத ஒரு வசதியை இப்பள்ளியில் செய்யவிருக்கிறோம். ஹைப்போ குறைபாடுகள் உள்ள மாணவர்கள் என்று சொல்லக்கூடிய மாணவர்களுக்காக சிறப்பு வகுப்பினை கட்டவருகின்றோம்.

அம்மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு பள்ளியாக இது விளங்கும் என்றும் கட்டடப் பணிக்கு 13 லட்சம் வெள்ளி தேவைப்படுவதாகவும் இதுவரையில் 5 லட்சம் பள்ளி திரட்டப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள தொகையை நல்லுள்ளங்கள் வழங்குவார்கள் என ராஜன் நம்பிக்கை தெரிவித்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன