வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > ஜெயலலிதாவின் சாப்பாட்டு செலவு ரூ1 .17 கோடியா? அப்பல்லோவின் அக்கப்போர்..!
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

ஜெயலலிதாவின் சாப்பாட்டு செலவு ரூ1 .17 கோடியா? அப்பல்லோவின் அக்கப்போர்..!

நேற்றும் இன்றுமாக தமிழகம் பரபரப்பாக பேசிவரும் முக்கிய செய்தி அப்பல்லோவில் மருத்துவமனையில் ஜெயலலிதா தங்கியிருந்த மருத்துவ செலவுகள்தான். அதிலும் அவர் 75 நாட்கள் சாப்பிட்டதாக அந்த மருத்துவமனை வெளியிட்டிருக்கும் ரசிதைப் பார்த்து தமிழகமே அதிர்ச்சியில் மூழ்கி இருக்கிறது.

கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவுகளால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டார். அவர் 75 நாட்கள் சிகிச்சை பெற்றும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை ஏற்படுத்தி, விசாரணையும் நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததற்கான மருத்துவ செலவு குறித்த பட்டியலை அந்த மருத்துவமனை ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஒப்படைத்தது.

 

 

அதில் ஜெயலலிதாவின் உணவு செலவு மட்டும் ரூ. 1.17 கோடி என்று அப்பல்லோ நிர்வாகம் கணக்கு கொடுத்துள்ளதே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த அதிர்ச்சியின் வெளிப்பாடாக தொடர் மீம்ஸ்கள், டுவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் என்று சமூக வளைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.  குறிப்பாக, 75 நாட்களில் அவர் உண்ட இட்டிலி உப்புமாவின் விலை இவ்வளவு அதிகமாகவ இருக்கும் என்று பொது மக்கள் அப்பல்லோ மருத்துவமனையை கிண்டல் செய்து வருகின்றனர்.

 

 

 

ஒரு நோயாளி அதுவும் அனுமதிக்கப்பட்ட போது அரை மயக்க நிலையில் இருந்தவர் எப்படி கோடிக்கணக்கிற்கு உணவுகளை உட்கொண்டிருக்க முடியும் என்பதே அனைவரின் கேள்வியாகும்.

ஜெயலலிதாவின் மரணம்தான் மர்மம் நிறைந்தது என்றால் அவர் குறித்து வெளியாகும் தகவல்களும், அவர் உண்ட உணவு பட்டியல் கூடவா மர்மமாக இருக்கும் என்று அவரின் தொண்டர்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.

மொத்த செலவு ரூ. 7 கோடி என்றும் அதில் அதிமுகவினர் ரூ. 6 கோடியை செலுத்திவிட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

இதில் ஜெயலலிதா தங்கியிருந்த அறை வாடகையை விட சசிகலா குடும்பத்தினர் தங்கியிருந்த அறை வாடகைதான் அதிகமாக உள்ளது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவருக்கு நெருக்கமானவர்கள், கட்சியினர், அரசு அதிகாரிகள் என்று அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றனர்.

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன