பலூச்சிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பில் 17 பேர் பலி

0
5

இஸ்லாமாபாத், ஆக 13

பாகிஸ்தானிலுள்ள பலூச்சிஸ்தான் மாகாணத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில் சிக்கிய 17 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், 30-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தற்கொலைப்படை தாக்குதலா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அம்மாகாண உள்துறை மந்திரி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.