திங்கட்கிழமை, ஜூன் 1, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் சிவராஜ் போட்டியிட முடியாது -தேர்தல் ஆணையம் முடிவு
அரசியல்முதன்மைச் செய்திகள்

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் சிவராஜ் போட்டியிட முடியாது -தேர்தல் ஆணையம் முடிவு

கோலாலம்பூர், டிச 28
கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் சிவராஜ் சந்திரன் போட்டியிடுவதற்கான தகுதியை இழந்துள்ளார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்தது தொடர்பில் அங்கு போட்டியிட்ட மனோகரன் தேர்தல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்து இருந்தார்.

அந்த வழக்கு விசாரணையின் முடிவில் அத்தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதனால் தேர்தல் செல்லாது என தேர்தல் நீதிமன்றம் அறிவித்ததோடு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் உறுதிப்படுத்தியது.

இதன் தொடர்பில் தொகுதியில் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் சிவராஜ் சந்திரன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட முடியுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையம் அனுப்பி இருந்த கடிதத்தில் அவர் போட்டியிட முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சிவராஜ் சந்திரன் எந்தத் தொகுதியிலும் போட்டியிட முடியாது அதோடு வாக்களிக்கும் தகுதியையும் அவர் இழந்துள்ளார் என்பதை கடிதம் வாயிலாக தேர்தல் ஆணையத் தலைவர் ஹசார் ஹசியான் ஹாருன் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிவராஜ் சந்திரனுக்கு பதிலாக கேமரன் மலை தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன